பிகார் மாநிலத்திலுள்ள சித்ரகுப்தா நகரைச் சேர்ந்தவர் அட்டுல் லால். இவர் ரயில்வே துறையில் பணியாற்றிவந்தார்.
அவரது மனைவி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், அட்டுல் லால் அவரது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.