ETV Bharat / bharat

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி.. ரூ.2 லட்சம் கொடுத்து மறைக்க முயற்சித்த பஞ்சாயத்து.. - பிகார் பாலியல் வன்புணர்வு வழக்கு

பிகார் மாநிலத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியின் தாயாருக்கு ரூ.2 லட்சம் கொடுத்து குற்றத்தை மறைக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் முயற்சி செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

Bihar: Panchayat offers Rs 2 lakh to rape victim to suppress case

author img

By

Published : Dec 12, 2022, 7:29 PM IST

பாட்னா: பிகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மைனாடண்ட் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் தாயாரிடம் ரூ.2 லட்சம் கொடுத்து குற்றத்தை மறைக்க திட்டமிட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில், மைனாடண்ட் கிராமத்தில் உள்ள எங்களது வீட்டில் டிசம்பர் 9ஆம் தேதி இரவு 10 மணியளவில் எனது மகள் வெளியே கட்டப்பட்டுள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கரும்பு தோட்டத்தில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதையடுத்து வீடு திரும்பிய சிறுமி தனது தாயாரிடம் முழு சம்பவத்தையும் தெரிவித்துள்ளார். அதன்பின் மைனாடண்ட் பஞ்சாயத்து உறுப்பினர்கள் சிறுமியின் வீட்டுக்கு புறப்பட்டு சென்று, ரூ.2 லட்சம் கொடுத்து போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என்றும் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ளுமாறும் மிரட்டல் விடுத்துள்ளனர். இருப்பினும், சிறுமியின் தாயார் எங்களிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளோம். இதனிடையே தலைமறைவான குற்றவாளியை தேடி வருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த மாணவன் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.