பாட்னா: பிகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ச்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த ராஜ் என்வருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியது. அப்போது ராஜ் தான் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருவதாகவும் விரைவில் நாடு திரும்பி திருமணம் செய்துகொள்வதாகவும் அர்ச்சனாவிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அர்ச்சனாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து இருவரும் 2015ஆம் ஆண்டு இந்து முறைப்படி நிச்சயதார்த்தமும், 2017ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டனர். அதன்பின் இருவரும் மணமகன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போதுதான் ராஜ் தான் ஒரு இஸ்லாமியர் என்பதையும், தனது பெயர் தௌகீர் என்பதையும், திருமணம் செய்துகொள்வதற்காக இந்துவாக நடித்ததையும் விளக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அர்ச்சனா ஆரம்பத்தில் கோபப்பட்டாலும் அவருடன் வாழ்க்கை நடத்தத்தொடங்கினார். இந்த நிலையில் தௌகீர் அம்பிகாவை இஸ்லாமிய மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை அம்பிகா மறுத்துவந்த நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பயந்தபோன அம்பிகா பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இருப்பினும், தௌகீர் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்துள்ளார். அதன்காரணமாக அம்பிகா கதிஹார் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அம்பிகா கதிஹார் நீதிமன்றத்தில் தௌகீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மனுதாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: புதுமணப்பெண்ணை தாலி கட்டிய கையோடு "கன்னித்தன்மை பரிசோதனை" செய்ய வற்புறுத்திய மணமகன்