பாட்னா: பிகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள தில்காமஞ்சி பல்கலைக்கழகத்தில் பியூனாக சேர்ந்த கமல் கிஷோர் (42) தன்னுடைய கடின உழைப்பால் அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. முங்கேர் மாவட்டத்தை சேர்ந்த கமல் கிஷோர் தன்னுடைய 23ஆவது வயதில் இளங்கலை அரசியல் அறிவியல் பட்டத்தை பெற்றார். அவருக்கு முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற லட்சியம் இருந்தது.
ஆனால், போதுமான பணம் இல்லாததால், அதே மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் காவலாளியாக பணிக்கு சேர்ந்தார். அதன்பின் தில்காமஞ்சி பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு துறையில் பியூனாக சேர்ந்தார். வேலை முடித்தப்பின் NET, BSUSC தேர்வுகளுக்கு தயாராகியும், அந்த தேர்வுகளை எழுதியும் வந்தார். அதைத்தொடர்ந்து முனைவர் பட்ட படிப்பிற்கு விண்ணப்பித்து அதே பல்கலைகழகத்தில் படித்தார். இப்போது பேராசிரியராகிவிட்டார்.
இதுகுறித்து கமல் கூறுகையில், நான் டாக்ட்ரேட்(Phd) படிக்க 2009ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன். அதன்பின் மூன்று ஆண்டுகள் கழித்து எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய வறுமையும், குடும்ப சூழலும் காரணமாக என் படிப்பிற்கு காலையில் வகுப்புகளுக்குச் சென்றுவிட்டு, மதிய வேளைகளில் பியூன் பணிகளைச் செய்வேன். இரவில், அன்றைய நாள் படித்த அனைத்தையும் ஒரு முறை திருப்பிப் படிப்பேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரிக்ஷா ஓட்டிச்சென்ற வெளிநாட்டவர் - வைரலாகும் வீடியோ