டெல்லி: பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையபெற்றுள்ள நிலையில், பிகார் துணை முதலமைச்சர் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை புதன்கிழமை சந்தித்து பேசினார்கள்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிகார் துணை முதலமைச்சர்கள் சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தன. இது குறித்து தர்கிஷோர் பிரசாத் ட்விட்டரில், “குடியரசுத் தலைவர் மாளிகையில் நானும், ரேணு தேவியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தோம். அப்போது ரேணு தேவி, குடியரசுத் தலைவருக்கு புத்தகங்களை பரிசளித்தார். நாங்கள் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து கலந்தோசித்தோம்” எனத் தெரவித்துள்ளார்.
இதேபோல் ரேணுதேவி, “நானும் தர்கிஷோர் பிரசாத்தும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பிகார் துணை முதலமைச்சர்கள் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை சந்தித்தனர்.
-
भारत गणराज्य के महामहिम राष्ट्रपति श्रीरामनाथ कोविंद जी से शिष्टाचार भेंट किया । इस अवसर पर बिहार के उपमुख्यमंत्री श्री @tarkishorepd जी भी उपस्थित रहे।@rashtrapatibhvn pic.twitter.com/fITiSj01AF
— Renu Devi (@renu_bjp) December 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">भारत गणराज्य के महामहिम राष्ट्रपति श्रीरामनाथ कोविंद जी से शिष्टाचार भेंट किया । इस अवसर पर बिहार के उपमुख्यमंत्री श्री @tarkishorepd जी भी उपस्थित रहे।@rashtrapatibhvn pic.twitter.com/fITiSj01AF
— Renu Devi (@renu_bjp) December 23, 2020भारत गणराज्य के महामहिम राष्ट्रपति श्रीरामनाथ कोविंद जी से शिष्टाचार भेंट किया । इस अवसर पर बिहार के उपमुख्यमंत्री श्री @tarkishorepd जी भी उपस्थित रहे।@rashtrapatibhvn pic.twitter.com/fITiSj01AF
— Renu Devi (@renu_bjp) December 23, 2020
இதைத்தொடர்ந்து இன்று பாஜக தலைவர் ஜேபி நட்டாவையும், நாளை (டிச.24) பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க உள்ளனர். பிகார் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை விரிவாக்கம் செய்யப்படும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: இலவச கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த பிகார் அமைச்சரவை