ETV Bharat / bharat

பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.... சீசன் 7 தொடங்குவது குறித்த முக்கிய அப்டேட் இதோ! - பிக் பாஸ் வீடியோ

Bigg Boss Tamil Season 7 : பிக்பாஸ் தொடரின் 7ஆவது சீசன் குறித்த அறிவிப்பு வீடியோவை விஜய் தொலைக்காட்சி தனது X (டிவிட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சீசன் 7 தொடங்குவது குறித்த முக்கிய அப்டேட் இதோ

author img

By

Published : Aug 19, 2023, 4:00 PM IST

ஹைதராபாத்: இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை என அனைவரது வரவேற்பையும் பெற்ற பிக்பாஸ் சீசன் 7 தொடங்குவது குறித்த டீசர் வெளியாகியுள்ளது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது.

தமிழில் பிக்பாஸ் பிரபலமடைந்ததற்கு முக்கிய காரணம் கமல்ஹாசனின் நேர்த்தியான மற்றும் பக்குவமான பேச்சு தான் என்று சொல்ல வேண்டும்.தவறுகளை எடுத்துரைப்பதிலும், போட்டியாளர்களின் பிளஸ் பாய்ண்டை சுட்டிக் காண்பிப்பதிலும் கமல்ஹாசன் என்றுமே தவறியது இல்லை. குறிப்பாக பிக்பாஸ் தொடர்களில் பங்கேற்கும் பிரபலங்கள் செய்யும் தவறை தொகுத்து அவர் வெளியிடும் ’குறும்படத்திற்கு’ தனிபட்டாளமே உண்டு.

பிக்பாஸ் நிகழ்ச்சி, தொலைக்காட்சியில் மட்டுமின்றி ஹாட்ஸ்டாரில் இலவசமாகப் பார்க்க முடியும் என்பதால் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்று உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் துவங்கப்பட்டது. பிக்பாஸ் முதல் சீசன் துவங்கும் போது, பல்வேறு சர்ச்சைகள் இந்த நிகழ்ச்சிக்கு எதிராகக் கிளம்பியபோது, அவை அனைத்தையும் சாமர்த்தியமாகப் பேசி பிக்பாஸ் நிகழ்ச்சியை ஹிட் செய்தார் உலகநாயகன்.

இருப்பினும் நடந்து முடிந்த 6 வது சீசனில் நடிகர் அசீம் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடன் போட்டியிட்ட சேர்ந்த விக்ரம் தான் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த சீசனுடன் கமல்ஹாசன் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை எனத் தகவல்கள் பரவி வந்த நிலையில்,அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிக்பாஸ் தொடரின் 7ஆவது சீசன் குறித்த அறிவிப்பு வீடியோவை விஜய் தொலைக்காட்சி தனது X (டிவிட்டர்) பக்கத்தில்வெளியிட்டுள்ளது.

அதில் தீம் மியுசிக் உடன் சூரிய வெளிச்சத்தில் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் வெள்ளை நிற உடையில் நின்று கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். ' I will be watching.’ என்ற பிக்பாஸ் சிக்னேச்சர் கமல்ஹாசன் சொல்லாமல் சைகையால் மட்டுமே காண்பிப்பது போல் அமைந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 7 அடுத்த மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :உலக புகைப்பட தினம்: புகைப்பட கலைஞர்களை படம் எடுத்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.