ETV Bharat / bharat

நான்கு மாநிலங்களுக்கு சட்ட மேலவை தேர்தல் அறிவிப்பு - தெலங்கானா சட்ட மேலவைத் தேர்தல்

ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள சட்ட மேலவை இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Biennial polls
Biennial polls
author img

By

Published : Nov 9, 2021, 7:57 PM IST

ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சட்ட மேலவை காலியிடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையில் நிரப்பப்பட வேண்டிய 8 உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், தெலங்கானா சட்ட மேலவையில் 12 உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், கர்நாடகா சட்ட மேலவையில் 20 உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா சட்ட மேலவையில் 5 உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இம்மாநிலங்களின் சட்ட மேலவை காலியிடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு 2021 நவம்பர் 16 அன்று வெளியிடப்படும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 2021 நவம்பர் 23.

வேட்பு மனுக்களின் பரிசீலனை 2021 நவம்பர் 24 அன்று நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 2021 நவம்பர் 26.

2021 டிசம்பர் 10 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். பதிவான வாக்குகள் 2021 டிசம்பர் 14 அன்று எண்ணப்படும். 2021 டிசம்பர் 16ஆம் தேதிக்குள் தேர்தல் நடைமுறைகள் நிறைவடைய வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. கோவிட்-19 விரிவான விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படும்.

இதையும் படிங்க: Delhi Pollution: தலைநகரை தொடர்ந்து திணறடிக்கும் காற்று மாசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.