ETV Bharat / bharat

இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடு, ஜரோப்பாவை இணைக்கும் ரயில், கப்பல் போக்குவரத்து திட்டம் - மோடி மற்றும் பைடன் அறிவிப்பு! - G20 Narendra Modi speech

Biden and Modi to announce rail and shipping project: G20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு நாடுகள் வழியாக அதாவது மத்திய கிழக்கு மற்றும் ஜரோப்பா வழியாக இந்தியாவை இணைக்கும் கப்பல், ரயில் வழித்தடத்திற்கான திட்டத்தினை அறிவித்துள்ளனர்.

biden-and-modi-to-announce-rail-and-shipping-project-to-link-india-to-middle-east-and-europe
இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடு, ஜரோப்பாவை இணைக்கும் ரயில், கப்பல் போக்குவரத்து திட்டம் - மோடி மற்றும் பைடன் அறிவிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 1:06 PM IST

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று (செப்.9) நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆதரவு நாடுகள் வழியாக அதாவது மத்திய கிழக்கு மற்றும் ஜரோப்பா வழியாக இந்தியாவை இணைக்கும் கப்பல் வழித்தடத்திற்கான திட்டத்தினை அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு மூலம் உலக அளவில் சிறந்த வர்த்தகத்தை உருவாக்க கூடிய சாத்திய கூறுகள் உள்ளன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர் கூறும் போது, G20 உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கப்பல் மற்றும் ரயில் போக்குவரத்து வழித்தடத்திற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க, இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய யூனியன் மற்றும் G20 யில் உள்ள மற்ற நாடுகளும் உள்ளன என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலக அளவில் உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டினை அதிகப்படுத்த இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். புதிதாக அமைக்கப்பட உள்ள ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தின் மூலம் ஏரிசக்தி பொருட்களுக்கான வர்த்தகம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உலகில் உள்ள பல நாடுகளின் பொருளாதாரத்தை இணைக்கும் சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முயற்சிக்கு இணையாக இந்த திட்டம் இருக்கும் என தெரியவருகின்றன.

அமெரிக்க அதிபரின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர் கூறும் போது, இந்த ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை அமைப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளதாக தெரிவித்தார். அதில், எரிசக்தி பொருட்கள் வழித்தடம் மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்புகளை அதிகரிப்பத்தால் நாடுகளின் வர்த்தகத்தை மேம்படுத்த முடியும், இரண்டாவதாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளுடைய வளர்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சி பெரும் என்றும், மூன்றாவதாக மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு குறைபாடுகளை களைய உதவும் என கூறினார்.

இதையும் படிங்க: G20 summit: கோலாகலமாக தொடங்கும் ஜி20 மாநாடு! உலக தலைவர்கள் இந்தியா வருகை!

மேலும், ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டத்திற்கு சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு இடையே உலக அளவில் அதிக ஆர்வம் உள்ளது. இந்த திட்டம் வெளிப்படையானது மற்றும் உயர் தரமானது மேலும் இதில் எந்த வற்புறுத்தலும் இருக்காது என தெரிவித்தார்.

மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் G20 நிகழ்ச்சி நிரலை குறித்து ஜான் ஃபைனர் கூறும் போது, G20 மாநாட்டின் முதல் பகுதியில் "ஒரு பூமி" என்ற தலைப்பில் ஒவ்வொரு நாடும் புதுவித ஆற்றலை பயன்படுத்த ஊக்குவிப்பது, உள்நாட்டு பொருட்களை ஊக்குவிப்பது, காலநிலை மாற்றம் குறித்த விவாதம் மற்றும் முதலீடு குறித்த விவாதங்கள் இருக்கும். மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரால் பல நாடுகள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இதனால், அதிக உணவு மற்றும் எரிசக்தி செலவு மற்றும் அதிகப்படியான செலவுகளை சமாளிக்க வேண்டியுள்ளது என்ற கருத்துகள் கூறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளார் என தெரிவித்துள்ளார்.

G20 உச்சி மாநாட்டின் இரண்டாவது பகுதி "ஒரு குடும்பம்" குறித்தது இதில், பொருளாதாரத்தை மேம்பாடுத்த உலக வங்கி 25 பில்லியன் டாலர் புதிய கடன்களை உருவாக்க கோரிக்கைகள் பற்றி விவாதம் நடத்த திட்டமிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். G20 உச்சி மாநாட்டை சர்வதேச மன்றமாக விரிவுப்படுத்தி வலுப்படுத்த வெள்ளை மாளிகை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதே நேரத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்து கொள்ளவில்லை இருப்பினும் இரு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். ஜி20 மாநாட்டின் வாயிலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் குறித்து முடிவு எடுப்பது சவாலானது தான் என அமெரிக்க அதிபரின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.