ETV Bharat / bharat

தனியார் ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி - கந்து வட்டி கொடுமையா? - Suicide Helpline No

கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் தனியார் ஒப்பந்ததாரர் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி
author img

By

Published : Jan 11, 2023, 11:04 PM IST

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம், போபால் அடுத்த பைரகர் காலன் பகுதியைச் சேர்ந்தவர், கிஷோர். தனியார் ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில், தன் வீட்டில் கிஷோர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மருத்துவனையில் கிஷோர், அவரது மனைவி குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார், கிஷோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடல்நிலை குறித்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தொடர் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஒப்பந்ததாரர் கிஷோரின் செல்போன் உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். ஒப்பந்தப் பணிகளுக்காக அதிக கடன் வாங்கியதாலும், கந்து வட்டி கொடுமை தாங்காமல் கிஷோர் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கென்ய மூதாட்டிக்கு அரிய இதய அறுவை சிகிச்சை - கர்நாடக மருத்துவர்கள் சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.