ETV Bharat / bharat

ராஜசேகர ரெட்டியின் சகோதரர் கொலை செய்யப்பட்டாரா..? - chandra babu naidu

புலிவேந்துலா: ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர் மர்மமாக இறந்ததையடுத்து, அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி
author img

By

Published : Mar 16, 2019, 9:17 AM IST

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமாக பதவி வகித்தவர் ராஜசேகர ரெட்டி. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விமானத்தில் சிக்கி உயிரிழந்தார். ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பின்னர், இவரது மகன் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி கட்சியை வழி நடத்தி வருகிறார். இந்நிலையில் ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரர் ஒய்.எஸ். விவேகானந்தா ரெட்டி அவரது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்தார்.

68 வயதான விவேகானந்த ரெட்டி நேற்று தனது அறையில் ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்ததாக அவரது உதவியாளர் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.இந்நிலையில், விவகானந்த ரெட்டியின் மரணம் குறித்து தகவலறிந்ததும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது தாயார் விஜயம்மா ஆகியோர் புலிவேந்துலா விரைந்தனர்.

இதனிடையே வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டே இந்த கொலை நடத்தப்பட்டதாக ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "தெலுங்குதேசம் கட்சி ஆட்சியில் இருந்த போதுதான் எனது தாத்தா ஒய்.எஸ்.ராஜ ரெட்டி கொலை செய்யப்பட்டார். இதே ஆட்சியின் போது விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் நானும் கொலை தாக்குதலுக்கு ஆளானேன். தற்போது மீண்டும் இதே ஆட்சியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போன என் தந்தையின் மரணம் குறித்து இரண்டு நாட்களுக்கு முன் சட்டசபையில் பேசிய சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர் திரும்ப வர போவதில்லை என்றார்.

நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டே இந்த அரசியல் கொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. விவேகானந்த ரெட்டி இறந்தது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டிருக்கும் போலீசார் தவறான ஆதாரங்கள் மூலம் வழக்கை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்"எனக் கூறினார்.அதேபோல், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் விஜய் சாய் ரெட்டி கூறுகையில், அரசியல் கொலைகள் மேல் நம்பிக்கை கொண்டவர் சந்திரபாபு நாயுடு. இக்கொலை சம்பவத்தில் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் மற்றும் ஆதிநாராயண ரெட்டி ஆகியோர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் எனக் கூறினார்.

மறைந்த விவேகானந்த ரெட்டி கடப்பா நாடாளுமன்ற தொகுதியில் இரண்டு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கடப்பா தொகுதியில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் சந்திரபாபு நாயுடு போட்டியிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

https://www.aninews.in/news/national/politics/ysrcp-alleges-tdps-role-in-ys-vivekananda-reddys-death-demands-cbi-enquiry20190315235201/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.