ETV Bharat / bharat

பர்மாவில் 4ஆவது உலகத்தொழில் மாநாடு - எழுமின் அமைப்பு

சென்னை: பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் 'ரைஸ்' என்று அழைக்கப்படும் எழுமின் அமைப்பு பர்மா தலைநகர் யங்கூனில் நான்காவது உலகத்தொழில் மாநாட்டை நடத்தவுள்ளது.

எழுமின் அமைப்பு செய்தியாளர் சந்திப்பு
எழுமின் அமைப்பு செய்தியாளர் சந்திப்பு
author img

By

Published : Jan 30, 2020, 9:23 AM IST

தமிழக தொழில் முனைவோர்களையும் மற்றும் திறனாளர்களையும் புதிய தொழில்வாய்ப்புகளுக்கு அறிமுகப்படுத்திவரும் ரைஸ் அமைப்பின் நிறுவனர் பாதரியார் ஜெகத் கஸ்பார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "'ரைஸ்' என்று அழைக்கப்படும் எழுமின் அமைப்பு பர்மா தலைநகர் யங்கூனில் நான்காவது உலகத்தொழில் மாநாட்டை நடத்துகிறது. பிப்ரவரி 20-21 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடத்தப்படும்.

மேலும் பர்மாவில் 15 லட்சம் தமிழர்கள் உள்ள நிலையில், அந்நாட்டில் ஏற்றுமதி, இறக்குமதி, தகவல் தொழில்நுட்பத் துறை, சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன.

அங்குள்ள வாய்ப்புகளை தமிழ் தொழில்முனைவோர்கள் பயன்படுத்தி மேலும் வளரும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழர்கள் வருகிறார்கள்.

இந்தியாவிலிருந்து 70-க்கும் மேற்பட்டவர்கள், மலேசியாவிலிருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள், வடஅமெரிக்க நாடுகளிலிருந்து 20-க்கும் மேற்பட்டவர்கள் என மொத்தமாக 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

எழுமின் அமைப்பு செய்தியாளர் சந்திப்பு

இந்நிலையில் எழுமின் அமைப்பு யங்கூனில் சிறிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்கிவருகிறது. மேலும் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்வதற்காகத் தொடர்பு அலுவலகம் ஒன்றையும் ஏற்படுத்துகிறது. இந்த மாநாட்டை பர்மா வர்த்தக துறை அமைச்சர் தொடங்கிவைக்கவுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பிலும் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறினார்.

இதையும் படிங்க: டாடா நிறுவனத்தின் புதிய கார் ’அல்ட்ராஸ்' சென்னையில் அறிமுகம்!

Intro:

Body:Script in wrap

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.