ETV Bharat / bharat

பிறந்த குழந்தைக்கு அருமருந்தாம் 'தாய்ப்பால்'! சிறப்புக் கட்டுரை - Mother Feed

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டுவருகிறது.

breastfeeding
author img

By

Published : Aug 1, 2019, 12:01 PM IST

குழந்தை என்பது வரம். அதன் அருமையை சிலரிடம் கேட்கும்போதுதான் நமக்குத் தெரியும். குழந்தையை பத்து மாதம் தனது கருவில் சுமக்கும் தாய் ஒவ்வொரு நாளையும் இன்பமயமாக கடக்கிறாள். அப்படி அருதவமிருந்து கிடைக்கும் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுத்தால் கடமை முடிகிறது என்று பல தாய்மார்கள் தவறாக கருதுகிறார்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், குழந்தையை இந்த வெளி உலகிற்கு கொண்டுவந்தப் பிறகுதான் தாயின் கடமை ஆரம்பமாகிறது. அதில் முதலாவாது, குழந்தை பிறந்த அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கட்டாயம் கொடுப்பதுதான்.

baby
குழந்தை

வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை மட்டும் கண்ணும் கருத்துமாக வளர்த்து, பிறந்தவுடன் கொடுக்கப்படும் தாய்ப்பால்தான் அதன் முதல் நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து ஆகும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்கும் விதமாக, ஆண்டுதோறும் தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை உலகம் முழுக்க கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த வாரத்தில் உலகம் முழுவதும் பல தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகள் நடத்தி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தையும், அதனால் பெண்களுக்கு ஏற்படும் நன்மையையும் எடுத்துரைக்கின்றனர்.

baby
உலகத் தாய்ப்பால் வாரம்

தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கு கொடுக்கப்படும் உணவு அல்ல. அது அருமருந்து! குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு மஞ்சள் நிறத்தில் பால் சுரக்கும். அதைச் சீம்பால் என்பார்கள். அந்தச் சீம்பாலில் குழந்தைக்குத் தேவையான புரதச் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.

உதாரணமாக பசு ஒன்று கன்று ஈன்றால், அப்போது பசுவிற்கு சுரக்கும் பாலை சீம்பால் என்பார்கள். அந்தப் பாலை அருகிலிருக்கும் அனைவரும் வாங்கிவந்து தங்களது பிள்ளைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுத்து குடிக்கச் சொல்வார்கள். ஏனென்றால், பசு கொடுக்கும் அந்தச் சீம்பாலில், அவ்வளவு புரதச் சத்துகள் நிறைந்துள்ளன. பசு கொடுக்கும் பாலில் இவ்வளவு சத்துகள் நிறைந்துள்ளது என்றால், குழந்தை பிறந்த அரை மணி நேரத்தில் தாய் கொடுக்கும் பாலில் எவ்வளவு புரதச் சத்துகள் நிறைந்திருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்படி சுரக்கும் சீம்பாலை குழந்தை பிறந்த அரை மணி நேரம் முதல் 1 மணி நேரத்தில் கொடுப்பதால், குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

குழந்தை பிறந்த நாள் முதல் குறைந்தது ஆறுமாதமாவது கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் மட்டுமே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், சளித் தொல்லை, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்.

மேலும், இது குழந்தைக்கு மட்டும்தான் நன்மையைத் தரும் என்று நாம் நினைக்கக் கூடாது. அதில் நன்மை தாய்க்கும் உண்டு. எப்படி என்று கேட்கிறீர்களா? குழந்தைக்குத் தொடர்ந்து ஆறு மாதமாவது தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களுக்கு புற்றுநோய், மார்புப் புற்றுநோய், மார்புக் கட்டி ஏற்படுவது தடுக்கப்படும்.

மேலும், தாயின் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து, உடல் எடை சீராக இருக்கும். இப்படி பல்வேறு நன்மைகள் குழந்தைக்கும், தாய்க்கும் கொடுக்கும் சக்தி இந்தத் தாய்ப்பாலுக்கு உண்டு. எனவே தாய்ப்பாலை அனைத்து தாய்மார்களும் தங்களது குழந்தைகளுக்குத் தவறாது கொடுக்க வேண்டும்.

baby
தாயின் அரவணைப்பில் குழந்தை

இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் வேலைக்குச் செல்லும் நிலையில் இருப்பதால், அவர்களின் நிலையைப் புரிந்துகொண்டு அங்கு பணிபுரிபவர்களும், உறவினர்களும் உதவி செய்ய வேண்டும். அலுவலகங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கு தனி இடம் அமைத்துக் கொடுப்பது, அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

வீட்டில் கணவர், உறவினர்கள் உதவி செய்கையில், தாய் குழந்தையிடம் அதிக நேரத்தை செலவிட முடியும். இதன்மூலம் குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனித்து பாதுகாக்க முடியும். மேலும், வெளியில் வேலைக்குச் செல்லும் இடங்களில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையை கவனித்துக் கொள்ள ஏதுவாகவும் வழிவகை செய்து கொடுத்தால், அது மிகவும் சிறந்ததாக அமையும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பழச்சாறு உள்ளிட்ட நீர்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் பருக வேண்டும். மேலும், பேரீச்சை, நெல்லிக்காய் உள்ளிட்டவற்றையும் தவறாது சாப்பிட வேண்டும். குறிப்பாக, தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பாக ஒரு குவளை நீரையாவது குடிக்க வேண்டும். இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் தாய்மார்களுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கும். மேலும், காலையில் குழந்தைக்கு குளிக்காமல், மார்பை சுத்தம் செய்யாமல் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. குறைந்தது மூன்று நேரத்திற்கு ஒருமுறையாவது தாய்ப்பாலை கட்டாயம் கொடுக்க வேண்டும்.

குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் தவிர குழந்தைக்கு வேறு எந்த உணவையும் கொடுக்கக் கூடாது.

baby
குழந்தை

ஆறு மாதத்திலிருந்து குழந்தைக்கு ஒரு வயது ஆகும்வரை தாய்ப்பாலுடன் சேர்த்து புரதச்சத்துள்ள உணவுகளை கொஞ்சம் கொஞ்சாமாக மசித்துக் கொடுக்க வேண்டும். தினம் ஒரு வேகவைத்த முட்டை, காய்கறிகளை கொடுக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு குழந்தைக்கு எந்த பருவத்தில் எதைக் கொடுக்க வேண்டும் என்ற அறிந்து, அதைத் தவறாமல் செய்தாலே போதும். மேலும், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்று மூடநம்பிக்கையை வளர்க்காமல், நம்முடைய அடுத்தத் தலைமுறையை நோய்களிலிருந்து காப்பாற்ற நோய் எதிர்ப்புச் சக்தி மிக்க குழந்தைகளாக உருவாக்குவது ஒவ்வொரு தாயின் தலையாய கடமையாகும்.

எனவே, தாய்மார்கள் குழந்தைகளை பேணி காத்து ஆரோக்கியத்துடனும், நல்ல மனநிலையுடனும் வளர்க்க தாய்ப்பால் அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து நோய்களை விரட்டுவோம்; ஊட்டச்சத்துமிக்கவர்களாய் வளர்ப்போம்!

Intro:Body:

குழந்தைகளின் முதல் உணவு”-உலக தாய்ப்பால் வார கொண்டாட்டம்..! bit.ly/2GEd7TU #WorldBreastFeedingWee

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.