ETV Bharat / bharat

அமித் ஷா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? - சசி தரூர் கேள்வி! - எய்ம்ஸ்

டெல்லி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள் துறை அமைச்சர் அமித் ஷா, எய்ம்ஸ் மருத்துவமனையை விட்டுவிட்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Shashi Tharoor
Shashi Tharoor
author img

By

Published : Aug 3, 2020, 5:48 PM IST

உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, நேற்று(ஆக.2) நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமித் ஷா, அரசு மருத்துவமனையை தவிர்த்துவிட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதியானது இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

அமித் ஷாவின் இந்த செயல் குறித்து, திருவனந்தபுரம் மக்களவை தொகுதியின் உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து சசி தரூர் தனது ட்விட்டர் பக்த்தில், "அமித் ஷா, உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, அவர் ​​எய்ம்ஸ் செல்ல விரும்பவில்லை.

  • True. Wonder why our Home Minister, when ill, chose not to go to AIIMS but to a private hospital in a neighbouring state. Public institutions need the patronage of the powerful if they are to inspire public confidence. https://t.co/HxVqdREura

    — Shashi Tharoor (@ShashiTharoor) August 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மாறாக அண்டை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அரசு நிறுவனங்கள் (மருத்துவனைகள்) மீதான பொது மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க சக்தி வாய்ந்த நபர்களின் ஆதரவு தேவை" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நேற்று கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து அமித் ஷா தனது தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவின் முதல்கட்ட அறிகுறிகள் தென்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். இதையடுத்து, கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. நான் உடல் நலத்துடன் உள்ளேன். மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தனிப்படுத்திக்கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: நாணயத்தை விழுங்கிய சிறுவன்... கரோனா அச்சத்தால் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மறுத்ததால் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.