ETV Bharat / bharat

'சி.ஏ.ஏ.வுக்கு எதிராகப் போராட பெண்களைப் கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை!'

author img

By

Published : Mar 4, 2020, 1:22 PM IST

அலிகார்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பெண்களைப் போராட கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப் பிரதேச காவல் துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

UP Police  anti-CAA protest  CAA  protest  பெண்களை போராட கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை: உத்தரப் பிரதேச காவல்துறை  குடியுரிமை திருத்தச் சட்டம், அலிகர் போராட்டம், வற்புறுத்தல், கணவர் மீது புகார், விசாரணை, நோட்டீஸ், நடவடிக்கை  Woman informs UP Police that her husband forced her to join anti-CAA protest in Aligarh
Woman informs UP Police that her husband forced her to join anti-CAA protest in Aligarh

உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில், பெண்கள் சிலர் நிர்ப்பந்தத்தின்பேரில் கலந்துகொள்கின்றனர் என அம்மாநில காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து காவல் துறை உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அலிகரில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்களில் சிலர், தங்கள் கணவனின் வற்புறுத்தல், நிர்ப்பந்தத்தின்பேரில் கலந்துகொண்டதாகத் தெரிவித்தனர்.

மேலும் சில பகுதிகளிலும் இதுபோன்று நடந்துள்ளது. இது பற்றி பெண் ஒருவர் தகவல் கொடுத்தார். அவரின் கணவரிடம் விசாரித்தபோது அவர் மறுத்தார். பெண்களைப் போராட்டத்தில் சேருமாறு நிர்பந்திக்கும் நபர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அலிகர் ஜீவன்கர் சாலையில் ஏராளமான பெண்கள் கடந்த ஆறு நாள்களாகப் போராடிவந்தனர். அவர்களை அகற்ற நிர்வாகம் கடந்த ஒன்றாம் தேதியே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சி.ஏ.ஏ. விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ஐ.நா. மனு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.