ETV Bharat / bharat

பிகார் வெள்ளம்: கர்ப்பிணிக்கு மீட்பு படையினர் படகில் குழந்தை பிறந்தது! - கர்ப்பிணிக்கு படகில் பிரசவம்

பாட்னா: பிகார் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிக்கு மீட்பு படையினர் படகில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

பேபி
பேபி
author img

By

Published : Jul 26, 2020, 6:57 PM IST

பிகார் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளப்பெருக்கை சமாளிக்க 21 என்.டி.ஆர்.எஃப் குழுவினர் வெவ்வேறு மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் கோபாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், 25 வயதான கர்ப்பிணி சிக்கியுள்ளதாக மீட்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் விரைந்த மீட்பு படையினர், பத்திரமாக கர்ப்பிணியை படகில் ஏற்றினர். அப்போது, திடீரென்று அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், மீட்பு படையினர் உதவியால் படகிலே பெண் குழந்தை பிறந்துள்ளது. மீட்பு படையுடன் ஆஷா குழுவினரும் இருந்ததால் பிரசவத்திற்கு உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து என்.டி.ஆர்.எஃப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "என்.டி.ஆர்.எஃப்பின் ஒன்பதாவ பட்டாலியன் குழுவினர்தான், கர்ப்பிணி பெண் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர், தாயும், குழந்தையும் ஆம்புலன்ஸ் மூலம் பஞ்சாரியா கிராமத்தில் உள்ள பொது சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது, இருவரும் நன்றாக இருக்கிறார்கள். என்.டி.ஆர்.எஃப் வீரர்கள் அனைவருக்கும் அவசர காலத்தில் பிரசவத்தை கையாளுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை என்.டி.ஆர்.எஃப் படகில் 10 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது" எனத் தெரிவித்தார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.