தெலங்கானா அரசுப் பேருத்து ஓட்டுநர், நடத்துநர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 5ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட 48 ஆயிரம் ஊழியர்கள் வேலையிழந்ததாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திடீர் உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
அப்போது, போராட்டத்திற்கிடையே இரண்டு ஊழியர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கம்மம் மாவட்டம் சாத்துப்பள்ளி பேருந்து பணிமனையில் நடத்துநராக வேலை செய்துவந்த நீரஜா, நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீரஜா தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஓட்டுநர் வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்'