ETV Bharat / bharat

தெலங்கானாவில் அதிர்ச்சி: பெண்ணுக்கு 139 பேர் பாலியல் வன்கொடுமை! - பஞ்சகுட்டா காவல் நிலையம்

ஹைதராபாத்: தெலங்கானாவில் 25 வயதுடைய பெண் ஒருவர் 139 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

abuse
woman threatened
author img

By

Published : Aug 22, 2020, 12:41 PM IST

தெலங்கானா மாநிலத்தில் பெண் ஒருவர் பல ஆண்டுகளாக அச்சுறுத்தப்பட்டு கிட்டத்தட்ட 139 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இது குறித்து அவர் ஆகஸ்ட் 20ஆம் தேதி பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதில் அவர், “எனக்கு 2009இல் திருமணமானது. திருமணமாகி மூன்று மாதங்களிலேயே கணவரின் உறவினர்கள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். எனது மாமியாரும் என்னை கொடுமைப்படுத்தியதோடு மட்டுமல்லாது இதற்கு உடந்தையாக இருந்தார்.

இதனால் வாழ்க்கையே வெறுத்துப்போன நான் 2010ஆம் ஆண்டு டிசம்பரில் விவாகரத்துப் பெற்றேன். தொடர்ந்து நான் மேற்படிப்பு படிக்கச் சென்றபோது, அங்கும் பலர் என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். இவ்வாறு கிட்டத்தட்ட 139 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரானது, 42 பக்க முதல் தகவல் அறிக்கையாகப் (FIR) பதியப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் பல ஆண்டுகளாக 139 நபர்களால் பல இடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மேலும், அவர் பலரது அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளார். இதனாலேயே அவர் தாமதமாகப் புகார் அளித்துள்ளார்” எனக் கூறினர்.

இதையும் படிங்க: டெல்லியில் சிறுமியை பலமாக தாக்கி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.