மொராதாபாத் மாவட்டத்தில், ஜெயந்திப்பூர் என்ற பகுதியில் அருகருகே குடியிருப்பவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையால் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு பெண் கொலை செய்யப்பட்டார் என நேற்று ( ஜூன்.2) மாவட்ட உதவி கண்காணிப்பாளர் தீபக் புஹர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "அண்டை வீட்டுக்காரர்களாக இருக்கும் இரு குழுக்களிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த இரு குழுக்களுக்கும் வாக்குவாதம் அதிகமாகி மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் மோதலில் அந்த பெண்னை எதிர் குழுவினர் அடித்தே கொன்றுள்ளனர்.
அதன்பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தற்போது அப்பெண்ணின் உடல் மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த பின்னரே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.