ஜல்ராபதானில் உள்ள பால்தா பகுதியில் ஒரு மாதத்திற்கு மேலாக பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த மூன்று பேரை ஜலாவர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பிரதான் சிங், அவரது சகோதரன் மகேந்திர சிங், அவர்களது தந்தை பரத் சிங் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தன்னை நான்கு முறை கணவரின் தந்தையும், கனவரின் சகோதரரும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணைக் காவல் கண்காணிப்பாளர் கோபால் மீனா, “பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமனாரும், கணவரின் சகோதரனும் பல முறை அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். திருமணம் ஆனதிலிருந்து பெண் தாய்மை அடையாததைக் காரணம் காட்டி இந்த கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர்.
இதில் சம்பத்தப்பட்ட இருவரையும், உடந்தையாக இருந்த பெண்ணின் கணவரையும் காவல் துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.