ETV Bharat / bharat

கரோனா அச்சுறுத்தல்: பண்ணை வீட்டில் குமாரசாமியின் மகன் திருமணம்?

பெங்களூரு: கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகனின் திருமணம் பண்ணை வீட்டில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

kumarasamy
kumarasamy
author img

By

Published : Apr 16, 2020, 1:29 PM IST

கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் பல்வேறு தரப்பினர் பெரும் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, வெளிமாநிலத் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர். பெரும்பாலான திருமண நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெங்களூருவில் நடைபெறவிருந்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் மகனின் திருமணம், ராமநகர் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து குமாரசாமியின் ஊடகச் செயலாளர் கே.சி. சதாநந்தா கூறுகையில், "குமாரசாமியின் மகனான நிக்கிலின் திருமணம் ஊரங்டங்கின் காரணமாக பிடாடியில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெறவுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள், நெருக்கமானவர்கள் மட்டும் தான் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, திருமணத்தை பெங்களூருவில் நடத்தலாம் எனத் திட்டமிட்டோம். ஆனால், பெங்களூருவில் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், திருமணத்தை பண்ணை வீட்டில் நடத்தவுள்ளோம்" என்றார். திருமணத்தை நடத்த குமாரசாமி மாநில அரசிடம் அனுமதி பெற்றுள்ளார்.

முன்னதாக குமாரசாமியின் மகன் நிக்கிலுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணப்பாவின் மகள் ரேவதிக்கும் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 21 நாட்கள் லாக்டவுன்; இந்தியா கடந்து வந்த பாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.