ஜெருசலத்தில் உள்ள தேவாலயத்திற்கு ஆந்திர அரசு மானிய விலையில் கிறித்துவர்களை அழைத்துச் சென்றுவருகிறது. இதனை ஆந்திர அரசு திருப்பதி கோயிலுக்கு செல்லும் பேருந்து பயண சீட்டில் விளம்பரமாக வெளியிட்டுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆந்திர மாநில பாஜக மேலிட பொறுப்பாளர் சுனில் தியோதர் கூறுகையிஸ், "திருப்பதி கோயிலுக்குச் செல்லும் பேருந்தில் கொடுக்கப்படும் பயண சீட்டில் ஜெருசலம் தேவாலயம் பற்றி விளம்பரப்படுத்தி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மதச்சார்பற்ற கொள்கையை பின்பற்றும் மக்கள் இதனை ஏற்றக்கொள்ள மாட்டார்கள். கிறித்துவர்களை திருப்திபடுத்தும் வகையில் இந்த ஜெகன் அரசு செயல்பட்டால், அவரையும், அவரது குடும்பத்தாரையும் மக்கள் ஜெருசலத்திற்கே அனுப்பிவைப்பார்கள்" என்று காட்டமாகத் தெரிவித்தார்.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் சர்ச்சைக்குரிய பயண சீட்டை திரும்பப்பெற்றுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதற்காக காவல்துறை இதுகுறித்து விசாரணை செய்துவருகிறது. ஆந்திரவை கைப்பற்றும் நோக்கில் பாஜக இந்த சர்ச்சையை பயன்படுத்தி வருவதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.