ETV Bharat / bharat

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயம்! - flood

திஸ்பூர்: அசாம் வெள்ளத்தால் போபிடோரா வனவிலங்குகள் சரணாலயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள விலங்குகளின் நிலைமை நாளுக்குநாள் கவலைக்கிடமாக உள்ளது.

காண்டமிருகம்
author img

By

Published : Jul 21, 2019, 9:34 PM IST

அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வாநாட், ஜோர்கட், தரங், பார்பேட்டா, நல்பாரி, மஜூலி, சிரங்க், திபுருகார், உள்ளிட்ட 28 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள நீர் சூழ்ந்த சுமார் 4,128 கிராமங்கள் தனித்தீவு போல் காட்சி அளிக்கின்றன. பலரது வீடுகள் இடிந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவு விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 67 பேர் பலியாகியுள்ளனர். ஏறக்குறைய 60 லட்சம் பேர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் போபிடோரா வனவிலங்குகள் சரணாலயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், உலகத்திலேயே இந்தச் சரணாலயத்தில்தான் இந்திய காண்டாமிருங்கள் அதிகமுள்ளன. கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளில் பார்க்கப்படும் தெற்காசிய டால்பின் வகைகளும் இந்த சரணாலயத்தில்தான் அதிகம் உள்ளன.

அஸ்ஸாமில் உள்ள கசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளம் புகுந்ததில் ஐந்து காண்டாமிருகம் உட்பட 50 விலங்குகள் உயிரிழந்தன. பல அரிதான வனவிலங்குகள் இந்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளன. இந்த உயிரிழப்புகளை தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.