ETV Bharat / bharat

குடியிருப்புப் பகுதிகளில் காட்டுயானை நடைபயிற்சி - பொதுமக்கள் பீதி - கேரள மாநிலம், இடுக்கி

கேரளா: மூணார் அருகே குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டுயானையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

munnar
author img

By

Published : Nov 20, 2019, 2:16 AM IST

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு சிறந்த சுற்றுலாத்தலமாகும். இயற்கை எழில்மிகு இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவிகின்றனர். கடந்த சில தினங்களாக இங்கு சுற்றித்திரியும் ஒற்றைக் காட்டுயானையால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

குறிப்பாக, இந்த காட்டுயானை மூணார் தோட்டப்பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் காலையில் சுற்றித்திரிகிறது. ஏற்கனவே காட்டுயானைகள் விவசாய நிலங்களை அதிகளவில் சேதப்படுத்தி வரும் நிலையில் இக்காட்டுயானையால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மூணார் அருகே குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டுயானை

வீடுகளுக்கு அருகில் நிறுத்தியுள்ள வாகனங்களையும் யானைகள் சேதப்படுத்தி செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. மூணாரில் கூட்டமாகவும், தனியாகவும் நடமாடும் காட்டுயானைகளால் அப்பகுதிமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

Intro: மூணாறில் படையப்பாவின் ராஜ்ஜியம்.! குடியிருப்பு பகுதிகளில் ஜாலியாக வாக்கிங் வரும் காட்டுயானை. பொதுமக்கள் பீதி.
Body: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது மூணாறு. சிறந்த சுற்றுலாத்தலமாகத் திகழ்வதால் பருவநிலையை அனுபவிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர். கடந்த சில தினங்களாக இங்கு சுற்றித்திரியும் காட்டுயானையால் பொதுமக்கள் மற்;றும் சுற்றுலா பயணிகள் கலக்கத்தில் உள்ளனர். மூணாரின் தோட்டப்பகுதிகளிலும் டவுண் பகுதிகளில் உள்ள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டுயானைகள் விவசாய நிலங்களையும் அதிக அளவில் சேதப்படுத்திச் செல்கிறது. அத்துடன் வீடுகளுக்கு அருகில் நிறுத்தியுள்ள வாகனங்களையும் பெருமளவில் சேதப்படுத்தி செல்வதும் வாடிக்கையாகியுள்ளது
இந்நிலையில் மூணார் அருகே கிரஹாம்ஸ்லாண்ட் என்ற எஸ்டேட்டில் இறங்கிய காட்டுயானை வெகு நேரமாக மக்களை பீதியில் ஆழ்த்தியது. அந்த நேரத்தில் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுவர்கள் தான் காட்டுயானை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைந்தை கண்டனர். உடனைடியாக இவர்கள் வீட்டிற்குள் ஓடியதால் உயிர் பிழைத்தனர்.
வீட்டிலிருந்து சில அடி தூரத்தில் தான் காட்டுயானை நடந்து சென்றது. அதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன் மூணார் நல்ல தண்ணி எஸ்டேட்டிற்;கு செல்லும் வழியில் ஒரு வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை காட்டுயானை முற்றிலுமாக சேதப்படுத்தியது.

Conclusion: இது போன்று பல இடங்களிலும் மூணாரில் கூட்டமாகவும், தனியாகவும் நடமாடும் காட்டுயானைகளால் மனிதர்களின் உயிருக்கும், சொத்திற்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.