டெல்லி பாஜக தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா, "ட்ரம்ப்பின் வருகை என்பது இந்தியா - அமெரிக்க உறவில் மிக முக்கியமானதாக இருக்கும். தேசத்தின் சாதனைகள் குறித்து காங்கிரஸ் கட்சி பெருமைகொள்ள வேண்டும். இந்தியாவின் மதிப்பு சர்வதேச அரங்கில் உயர்ந்தால் காங்கிரஸ் கட்சிக்குப் பிடிப்பதில்லை.
உலகின் பழமையான ஜனநாயகத்தின் தலைவரும் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவரும் சந்தித்துப் பேசவுள்ளனர். பேரம் பேசுவதற்கு இந்தியா கடுமையான நாடு என்று ட்ரம்பே பலமுறை கூறியுள்ளார். எனவே, நாட்டின் நன்மைகள் குறித்து காங்கிரஸ் கட்சி கவலைகொள்ள தேவையில்லை.
பிரதமர் நரேந்திர மோடியின் கடினமான உழைப்பின் காரணமாக மற்ற நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுப்பெற்றுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: இந்திய - அமெரிக்க நட்புறவை பறைசாற்றவுள்ள 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி!