இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "நாட்டின் நலம் மிகவும் முக்கியமான ஒன்று. அதனைக் காப்பதே அரசின் கடமையாகும். அப்படி இருக்கையில், எல்லைப் பகுதியில் முன்பிருந்த நிலைமை குறித்து சீனாவிடம் இந்தியா வலியுறுத்தாதது ஏன்? ஆயுதம் ஏந்தாத 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனாவுக்கு அனுமதி அளித்தது ஏன்? கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவின் இறையாண்மை குறித்து பேசதாதது ஏன்?" என அடுக்கடுக்காகக் கேள்வியெழுப்பியுள்ளார்.
-
National interest is paramount. GOI's duty is to protect it.
— Rahul Gandhi (@RahulGandhi) July 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Then,
1. Why has Status Quo Ante not been insisted on?
2. Why is China allowed to justify the murder of 20 unarmed jawans in our territory?
3. Why is there no mention of the territorial sovereignty of Galwan valley? pic.twitter.com/tlxhl6IG5B
">National interest is paramount. GOI's duty is to protect it.
— Rahul Gandhi (@RahulGandhi) July 7, 2020
Then,
1. Why has Status Quo Ante not been insisted on?
2. Why is China allowed to justify the murder of 20 unarmed jawans in our territory?
3. Why is there no mention of the territorial sovereignty of Galwan valley? pic.twitter.com/tlxhl6IG5BNational interest is paramount. GOI's duty is to protect it.
— Rahul Gandhi (@RahulGandhi) July 7, 2020
Then,
1. Why has Status Quo Ante not been insisted on?
2. Why is China allowed to justify the murder of 20 unarmed jawans in our territory?
3. Why is there no mention of the territorial sovereignty of Galwan valley? pic.twitter.com/tlxhl6IG5B
லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் நிலவிவருகிறது. இந்த மோதலுக்குத் தீர்வு காண ராணுவ-தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடந்துவந்த சூழலில், சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் (ஜூன்) 15ஆம் தேதி இரவு இருதரப்பு ராணுவத்தினருக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. ஆயுதம் இல்லாமல் நடந்த இந்த மோதலில் படுகாயமடைந்து, 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்தச் சம்பவம் மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றது.
இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் யாங் யீ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக, கல்வான் பள்ளத்தாக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளை இருநாடுகளும் விலக்கிவருகின்றன.
இந்தப் பின்னணியில்தான் ராகுல் காந்தி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். சில நாள்களுக்கு முன்பு, ராகுல் காந்தியை விமர்சித்துப் பேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, "பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்துக்கு ராகுல் வரமாட்டார். ஆனால், துரதிருஷ்டவசமாக நாட்டு மக்களின் நம்பிக்கையைக் கெடுத்தும், ராணுவ வீரர்களின் தியாகத்தைக் கேள்வி எழுப்பியும்வருகிறார். பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் என்னவெல்லாம் செய்யக் கூடாதோ, அவையனைதையும் ராகுல் செய்துவருகிறார்" எனக் கூறிருந்தார்.
இதையும் படிங்க : உலகிற்கே சீனா பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது - ட்ரம்ப்