இந்திய பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் வாட்ஸ்அப் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள், மத்திய அரசின் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ள நிலையில், இதுதொடர்பாக ஜே.பி. நட்டா ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில்,
இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே போதுமான விளக்கம் அளித்து விட்டது.
சோனியா காந்தி தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது, அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியின் தகவல்களை வேவு பார்க்க உத்தரவிட்டது யார்? இதுகுறித்து காங்கிரஸ்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் தகவல்கள் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்த போது, ராணுவ தலைவராக வி.கே.சிங் இருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
முன்னதாக, இந்திய பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மோடி அரசுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் என பலரின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்று இதில் ஈடுபட்டதாகவும், அந்த தகவல்களை மத்திய அரசாங்கம் பெற்றுக் கொண்டதாகவும் அந்தக் குற்றச்சாட்டு நீள்கிறது.
இந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, இதுதொடர்பான கேள்விகளை எழுப்பினார். இந்திய சமூக செயற்பாட்டாளர்களின் தகவல்கள் திருடுபோய் இருப்பது அபாயகரமானது. இந்தியர்களின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா? என மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
இதையும் படிங்க: சமூக செயற்பாட்டாளர்களை வேவு பார்ப்பதா? சோனியா காந்தி கேள்வி