ETV Bharat / bharat

'கரோனா மனிதகுலத்திற்கான எதிரி' - உலக சுகாதார அமைப்பு - மனிதகுலத்திற்கான எதிரி

மனித குலத்திற்குப் பொதுவான எதிரியாகிய கரோனா பாதிப்பை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

WHO chief
WHO chief
author img

By

Published : Mar 19, 2020, 9:44 AM IST

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகின் பெரும்பாலான நாடுகள் தற்போது சோதனையான காலகட்டத்தை சந்தித்துவருகின்றன. 150-க்கும் மேற்பட்ட நாடுகளில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டாயிரத்து 200 பேர் வரை இந்தக் கொடிய வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். 82 ஆயிரம் மக்கள் கரோனா பாதிப்பிலிருந்த மீண்டுவந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை 25 வெளிநாட்டினர் உள்பட 169 பேருக்கு கரோனா தொற்று காணப்படுகிறது. கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதுமட்டுமின்றி வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட 36 நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், “கரோனா வைரஸ் பாதிப்பு எதிர்பாராத ஒரு அச்சுறுத்தலாகும்.

மனித குலத்திற்குப் பொதுவான எதிரியாகிய கரோனா வைரஸ் பாதிப்பை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும்” என்றார். முன்னதாக கரோனா வைரஸ் தாக்குதலைப் பெருந்தொற்று என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

இதையும் படிங்க: கரோனாவால் உ.பி. மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.