ETV Bharat / bharat

தனியார் கொள்ளைக்கு வழிவகுக்கிறதா புதிய கல்விக் கொள்கை? - பாகம் 2 - கஸ்தூரி ரங்கன்

ஏன் இப்போதெல்லாம் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதில்லையா என்று கேட்கலாம். சரிதான், ஆனால் ஒருவரால் கல்லூரிக் கட்டணத்தைக் கட்ட முடியவில்லை என்றால் வங்கியில் கல்விக் கடன் வாங்கி மொத்த படிப்பையும் படிக்க இயலும். இப்படிப் படித்தவர்கள் மட்டும் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர். ஆனால் எந்த வங்கியில் கோச்சிங் சென்டர்களுக்கு செல்ல கல்விக் கடன் வழங்கப்படுகிறது என்பது அந்த அரியவகை விஞ்ஞானிகளுக்கே வெளிச்சம்.

புதிய கல்விக் கொள்(ளை)கை - பாகம் 2
author img

By

Published : Jul 28, 2019, 3:49 PM IST

Updated : Jul 29, 2019, 12:52 PM IST

இக்கட்டுரையின் முதல் பாகத்தைப் படிக்க... தனியார் கொள்ளைக்கு வழிவகுக்கிறதா புதிய கல்விக் கொள்கை? - பாகம் 1

இந்த கல்விக் கொள்கை குறைந்த மாணவர் சேர்க்கையுள்ள பள்ளிகளை மூடுவது பற்றியும் பேசுகிறது. அதாவது குறைந்த அளவு மாணவர் சேர்க்கையுள்ள பள்ளிகள் அருகில் உள்ள பள்ளிகளில் இணைக்கப்பட்டு பள்ளி வளாகங்களாக உருவாக்கப்படும். தினக்கூலிகள் அதிகம் உள்ள இந்தியாவில் பெற்றோர்கள் எப்படி தினமும் பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள பள்ளி வளாகத்திற்கு பிள்ளைகளை அழைத்துச் செல்வார்கள். முக்கியமாக வளர்ந்துவரும் பெண்கள் கல்வி கற்பதை இது முற்றிலும் முடக்கிவிடும். மேலும் மாணவனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தால் ஆசிரியரிடம் கேட்டுக்கொள்ளலாம், ஆனால் ஒருங்கிணைந்த பள்ளிகள் வளாகத்திற்கிடையே பறந்து பறந்து பாடம் நடத்தும் ஆசிரியர் மாணவர்களின் சந்தேகங்களை எப்படி தீர்ப்பார்.

இந்தக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள மற்றொரு விஷயம், ஒன்பதாம் வகுப்பிலேயே மாணவர்கள் எதிர்காலத்தில் படிக்கவேண்டிய பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது. பதினோராம் வகுப்பிலேயே சரியான பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க மாணவர்கள் குழம்புவதை நாம் தெளிவாகப் பார்த்துவருகிறோம். இதில் ஒன்பதாம் வகுப்பிலேயே படப்பிரிவைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றால், அது யாருக்குப் பாதகம். தலைமுறை தலைமுறையாகக் கல்வியில் சிறந்து விளங்குபவர்களுக்கு இது பிரச்னை இல்லைதான். ஆனால், முதல் தலைமுறையில் கல்வி கற்பவர்களை இந்த செயல்முறை வெளியே அனுப்பும் வேலையைத்தானே செய்யும்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை, நான்கு ஆண்டுகளில் குறைந்தபட்சம் 24 முதன்மை பாடங்களை நெகிழ்வுத்தன்மையுடன் செமஸ்டர் வடிவில் தேர்வெழுத வேண்டும். புதிய தேசிய வரைவுக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் செமஸ்டர் முறைமீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை போலும். ஏனென்றால் பள்ளிக் கல்விக்குப் பின்னர் தேசிய அளவிலான ஒரு நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுதவேண்டும், அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் என கூறியிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க கோச்சிங் சென்டர்களுக்குதான் வழிவகுக்கும். இதன் மூலம் தற்போது நீட் தேர்வினால் எப்படி ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக் கனியாகியுள்ளதோ அதேபோல வெகு சீக்கிரத்தில் மற்ற கல்லூரிப் படிப்புகளும் ஆக வாய்ப்புகள் இருக்கின்றன.

கஸ்தூரி ரங்கன்
கஸ்தூரி ரங்கன்

ஏன் இப்போதெல்லாம் கல்லூரிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதில்லையா என்று கேட்கலாம். சரிதான், ஆனால் ஒருவரால் கல்லூரிக் கட்டணத்தைக் கட்ட முடியவில்லை என்றால் வங்கியில் கல்விக் கடன் வாங்கி மொத்த படிப்பையும் படிக்க இயலும். இப்படிப் படித்தவர்கள் மட்டும் தமிழ்நாட்டில் லட்சக் கணக்கானோர். ஆனால் எந்த வங்கியில் கோச்சிங் சென்டர்களுக்கு செல்ல கல்விக் கடன் வழங்கப்படுகிறது என்பது அந்த அரியவகை விஞ்ஞானிகளுக்கே வெளிச்சம். தற்போது தமிழ்நாட்டில் உள்ள சட்டப்படி, தனியார் கல்வி நிறுவனங்கள் வரையறுக்கப்பட்டுள்ள கட்டணங்களைவிட அதிகமாகப் பெறக்கூடாது. ஆனால் புதிய கல்விக் கொள்(ளை)கையோ தனியார் நிறுவனங்களே தங்கள் கட்டணங்களை வரையறுத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறது. ஏற்கனவே கல்வித் துறையை தனியார் தனது அசுர கரங்களைக் கொண்டு அலசிப்போட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது வகுக்கப்பட்டிருக்கும் கொள்கை தனியாரின் கரங்களை மேலும் வலுப்படுத்தும்.

ஜோதிராவ் பூலே
ஜோதிராவ் பூலே

இதுபோன்ற அதிக பளு தரும் நடைமுறைகள் மாணவர்களின் இடைநிற்றலையே அதிகரிக்கும். மூன்றாம் வகுப்பில் தொடங்கி நான்கு முறை நடத்தப்படும் பொதுத் தேர்வில் தோல்வியடைந்தால் அது மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும்.

இது சமூகத்தின் மீதான மிகப்பெரிய எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற தேர்வுகளில் தோல்வியடைந்தால் இடைநிற்றல் அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கும்போது பெண்களுக்குக் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கும். ஆண்களோ குறைந்த ஊதியம் தரும் தொழிலை தேர்ந்தெடுப்பார்கள் இல்லையென்றால் சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் வேலைகளில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதுகிறார்கள் ரியல் கல்வியாளர்கள்.

கல்லூரிகளின் தரத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தரமில்லாத கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் ஒருகிணைக்கப்பட்டு தகுதியும் திறமையும் அதிகரிக்கப்படுமாம்.

வகுப்பறை
வகுப்பறை

தகுதி, திறமை இந்த வார்த்தைகளை எங்கோ கேட்டதுபோல் இருக்கிறதா? ஆம், இட ஒதுக்கீட்டினால் தகுதியும் திறமையும் அற்ற மாணவர்கள் உள்ளே நுழைவதாகக் கூவியவர்கள், 10 விழுக்காடு முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்றவுடன் தகுதியையும் திறமையையும் எப்படி மறைத்தார்களோ அதேபோலத்தான் இதிலும் நடக்கும் என்ற சந்தேகம் வலுக்கிறது.

மேலும் 492 பக்கங்கள்கொண்ட இந்த வரைவில், ஒரு இடத்தில்கூட இட ஒதுக்கீட்டிற்கு மையமான சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கியவர்கள் என்ற வாசகம் இல்லை. மாறாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், யுனிவர்சிட்டி கிராண்டு கமிஷன் எனப்படும் யுஜிசி கலைக்கப்பட்டு தேசியக் கல்வி ஆணையம் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு எந்தவொரு கல்வியாளரும் தலைமை தாங்கமாட்டார்கள். மாறாக ரேடாரிலிருந்து மறைய மேகமூட்டங்களுக்கிடையே செல்ல சொன்ன நம் பிரதமர் மோடி தலைமை தாங்கவுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை
புதிய கல்விக் கொள்கை

இந்தியாவின் தலையெழுத்தையே தீர்மானிக்கபோகும் இந்தக் கல்விக் கொள்கை, முதல் தலைமுறை கல்வி கற்பவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பல குறைகளைக் கொண்டிருக்கிறது. நமக்குக் கிடைத்த கல்வி நமது அடுத்த தலைமுறையினருக்கும் எளிதில் கிடைக்கவேண்டும் என்ற பொறுப்பும் சமூக அக்கறையும் கொண்ட அனைத்து மக்களும் தேசிய கல்விக் கொள்கை வரைவு பற்றிய தங்களது கருத்துகளை நாளைக்குள் (30.07.2019) தெரிவிக்க வேண்டும். வருங்கால தலைமுறைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த கல்விக் கொள்கை மீது கருத்துகளை mhrd.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம்.

Intro:Body:Conclusion:
Last Updated : Jul 29, 2019, 12:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.