பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வான் ஏவுகணைகளை அமைப்பதற்கு சீனா உதவுவதாக தகவல் வெளியான நிலையில், அந்தத் தகவலை லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஆனால் ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு, ''பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே ராணுவ உபகரணங்கள் ஒத்துழைப்பு இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வான் ஏவுகணைகளை அமைப்பதற்கு சீனா உதவுவதாகவும், சீனா - பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொள்வதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் ராணுவ தளபதி ராஜு, அதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பது போன்ற அறிகுறிகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''நான் ஊடகங்களில் வந்த சில செய்திகளைப் பார்த்தேன். அதில் பாகிஸ்தானுக்கு சீனா உதவுவது போல் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் அதுபோன்ற எந்த அறிகுறியும் இதுவரை தென்படவில்லை'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிகார் தேர்தல் : களத்திற்கு வரும் ராகுல் காந்தி