ETV Bharat / bharat

முர்ஷிதாபாத் கொலை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை - காவல் துறை

author img

By

Published : Oct 12, 2019, 10:36 AM IST

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கர்ப்பிணி, எட்டு வயது சிறுவன், அந்தப் பெண்ணின் கணவன் உள்பட மூவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முர்ஷிதாபாத் கொலை

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்தில் விஜயதசமியன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை என அம்மாநில காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

West Bengal: மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ஜியாகன்ச் பகுதியில் வசித்துவருபவர் பந்து பிரகாஷ் பால் (35), தொடக்கப் பள்ளி ஆசிரியராக வேலை செய்துவருகிறார். இவருக்கு பியூட்டி (30) என்ற மனைவியும், 8 வயதில் ஆர்யா என்ற மகனும் உள்ளனர். பியூட்டி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். விஜயதசமி அன்று மேற்கு வங்க மாநிலமே கொண்டாட்டத்தில் இருந்தபோது, பிரகாஷ் பால் குடும்பத்தினர் யாரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளாததால் அக்கம் பக்கத்தினர் அவர்களது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது மூவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து, உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதையடுத்து அங்குசென்ற காவல் துறையினர், கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கொலை செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியாததாலும், கொலைக் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் பந்து பிரகாஷ் பால் சமீபத்தில்தான், தன்னை ஆர்.எஸ்.எஸ்.இல் இணைந்திருந்தார். இதனால் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர்தான் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என பாஜகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அரசியல் ரீதியான கொலைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் முக்கியமான மாநிலம் மேற்கு வங்கம். ஏனென்றால் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் பெரும் மோதல்கள் அடிக்கடி ஏற்பட்டுள்ளன. தற்போது ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, மேற்கு வங்கத்தில் பாஜக வளர்ந்துவருகிறது.

இதனால் இந்தக் கொலைக்கான காரணம் பற்றி வேகமாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜகவினர் கூறுகின்றனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படுகொலைகள் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மெளனம் காப்பது பற்றி, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டுவருகிறது. இந்தக் கொலையில் அரசியல் தலையீடுகள் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அரசியல் தலையீடு ஏதும் இல்லை என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தத்துவாஞ்சேரி ஜாமிஆ பள்ளிவாசல் கொள்ளை - காவல் துறை வலைவீச்சு!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.