இந்தியா - சீனா ராணுவத்துக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ஆம் தேதி நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். அதில் ஒருவரான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குணடன்டன் குமார் ஓஜாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரளானோர் அவருடைய வீட்டிற்கு வெளியே காத்திருந்தனர். “நான் லடாக்கில் இருக்கிறேன். விடுப்பு கிடைத்ததும் ஊருக்கு வருகிறேன்” என்று ஜூன் 7ஆம் தேதி ஓஜா தனது மனைவியிடம் தெரிவித்தார்.
"இந்திய ராணுவத்தில் இணையவேண்டும் என இளம்வயதிலேயே ஓஜா ஆர்வத்துடன் இருந்தார். அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வார்" என அவருடைய உறவினர்கள் உடைந்த குரலில் ஊடகங்களிடம் தெரிவித்தனர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஓஜாவுக்கு கடந்த 19 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம்’ - எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் திட்டவட்டம்