டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராம் விலாஸ் பாஸ்வான் டெல்லி மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்திருந்தார், ஆனால் தற்போது டெல்லி குடிநீர் வாரியாத்தால் வழங்கப்படும் நீர் பிஐஎஸ் (BIS) நடத்திய ஆய்வில் குடிக்க பாதுகாப்பானதாக இல்லை என தெரியவந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லியில் 11 பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகள் பிஎஸ்ஐ தரத்தில் இல்லை என்றும், மேலும் இது மத்திய அரசின் பிரச்னை இல்லை டெல்லி குடிநீர் வாரியத்துடன் தொடர்புடையது என்றும் அவர் தெரிவித்தார்.
ஏழை மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இதை வலியுறுத்துவதாக ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.
இதையும் படிங்க:உ.பி.யில் குப்பைத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சிசு!