கரோனாவுக்கு எதிரான போரில் களப்பணியாளர்கள் அயராது போராடி வருகின்றனர். குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் தங்கள் வீட்டிற்கே செல்லாமல் மருத்துவமனையில் 24 மணி நேரமும் தீவிரமாக மக்களின் உடல்நிலையைக் கண்காணித்து வந்தனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேலைப் பழுவைக் குறைப்பதற்காகவும், நோயாளிகளின் கஷ்டங்களைப் போக்குவதற்காகவும் வெளிநாட்டில் மருத்துவர்கள் நடனமாடுவது வழக்கம்.
அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், தங்கள் வேலைகளின் நடுவே ஒரு குட்டி ரிலாக்ஸ் வேண்டும் என்பதற்காக பாலிவுட் பாடல் ஒன்றுக்கு பிபிஇ உடையுடன் நடனமாடும் காணொலியை வெளியிட்டுள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் நீடிக்கும் மருத்துவர்களின் நடனக் காணோலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.