கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு சிறு சிறு அறிகுறிகள் இருப்பவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரள அரசு, மக்களுக்கு ஆன்டிபாடி சோதனை நடத்த சரியாக இயங்கும், கரோனா பரிசோதனைக் கருவிகளை இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அம்மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.
'நாங்கள் நல்ல முறையில் இயங்கும் கரோனா பரிசோதனைக் கருவிகளுக்காகக் காத்திருக்கிறோம். கருவிகளைப் பெற்றதும் அவற்றை சோதிக்க உள்ளோம். அதன் பிறகே மக்களிடம் ஆன்டிபாடி சோதனை மேற்கொள்ளவுள்ளோம்’ எனத் தெரிவித்தார்.
கேரளாவில் இதுவரை 447 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மூன்று பேர் உயிர் இழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரளாவில் ‘கூடே’ என்ற மருத்துவ சேவை தொடக்கம்