இது குறித்து அவர் பேசுகையில், 'பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதை எங்களது அண்டை நாடுகளுடன் சேர்த்து சில நாடுகளில் கொள்கையாக உள்ளது. பயங்கரவாதிகளுக்கு உதவுதல், நிதியளித்தல், பயிற்சி அளித்தல் உள்ளிட்டவை நடைபெற்றுவருகின்றன. அண்டை நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தங்கள் நாட்டில் 30,000 முதல் 40,000 பயங்கரவாதிகள் உள்ளனர் என்று கூறியது வரவேற்பு அளிக்கத்தக்கது. ஆனால், அவர்களுக்கு காஷ்மீரில் பயிற்சி அளிப்பதாக கூறியது தவறானதாகும்' என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், 'அவர்களுக்கு உங்கள் நாட்டில்தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய நாடும் பாதிக்கப்பட நேரிடும். எனவே, அதைப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுங்கள்' என்றார்.