2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. இதனையடுத்து, கட்சியில் முக்கியத்துவம் அளிக்காததால் அக்கட்சியில் இருந்து விலகிய விஸ்வேஷ்வர் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இவர் 2014 ஆம் ஆண்டு செவல்லா தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இம்முறையும் அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் இறங்குகிறார். இதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த விஸ்வேஷ்வர் ரெட்டி தனது சொத்து மதிப்பு ரூ.895 கோடி என குறிப்பிட்டுள்ளார். அப்போலோ குழுமத்தின் நெருங்கிய உறவினரான இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொத்து மதிப்பு 528 கோடி என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.