கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியமைத்துள்ளது.
புதிய ஆட்சி அமைந்தவுடன் சபாநாயகராக இருந்த ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாஜகவைச் சேர்ந்த விஸ்வேஷ்வர் ஹேக்டே காக்ரி புதிய சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள சிர்சி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார் ஹேக்டே.
அந்தத் தொகுதியிலிருந்து இதுவரை 6 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஹேக்டே. மேலும் முந்தைய பாஜக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.