'விலங்குகளை அன்புடன் நடத்துங்கள்' - கோலி ட்வீட்! - கர்ப்பிணியான உயிரிழந்தது குறித்து நட்சத்திரங்களின் ட்வீட்
கேரளாவில் கர்ப்பிணி யானை உயிரிழந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.

Virat Kohli
கேரள மாநிலம், பாலக்காடு பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு, அன்னாசிப் பழத்தில் வெடிமருந்துகள் வைத்து சாப்பிடக் கொடுத்ததில் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யானையின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், "விலங்குகளை அன்போடு நடத்துவோம். இந்தக் கோழைத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
கோலியைப் போல, மற்ற விளையாட்டு நட்சத்திரங்களும் சினிமா பிரபலங்களும் இச்சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.