ETV Bharat / bharat

முதல்வரிசை பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை ஏற்க முடியாது - பிரதமர் நரேந்திர மோடி

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற முதல்வரிசை பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 1, 2020, 6:33 PM IST

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

கர்நாடகாவின் ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் 25ஆவது ஆண்டு விழாவில், காணொலி மூலம் மருத்துவர்களுடன் பேசிய பிரதமர் மோடி, " கும்பல் மனநிலை காரணமாக, முதல் நிலை வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பெரும் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். முதல்வரிசை பணியாளர்களுக்கு எதிரான வன்முறையும், முரட்டுத்தனமான நடத்தைகளும் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. எந்தவொரு வன்முறையிலிருந்தும் உங்கள் அனைவரையும் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உங்களுக்காக 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பீட்டுத் தொகையையும் தற்போது வழங்கி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

சுகாதார ஊழியர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு ஏழு ஆண்டுகள் வரை பிணையில் வராத வகையில் சிறை தண்டனை விதித்து, முன்னதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

மேலும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கரோனாவை வீழ்த்த போராடும் கரோனா வீரர்கள், எளிதில் வீழ்த்த முடியாதவர்கள் என்றும், கரோனாவுக்கு எதிரான போரில் அவர்கள் நிச்சயம் வெல்வார்கள் எனவும் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க : பொது முடக்கத்தின் மத்தியில் ராஜஸ்தானில் அதிகரித்த குடும்ப வன்முறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.