பூஞ்ச்: பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி போர் நிறுத்த விதிகளை மீறி தாக்குதல் நடத்துவதால் தங்களது வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து உள்ளுர் கிராமவாசி ஒருவர் கூறுகையில், 'கடந்த மாதம் பாகிஸ்தானால் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் என் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் ராணுவ வீரர்கள் வந்தனர். அவர்கள் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நமது ராணுவத்தை எதிர்கொள்ளும் தைரியம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இல்லாததால் அவர்கள் அப்பாவி மக்களை கொல்ல நினைக்கிறார்கள். இந்திய ராணுவம் எப்போதும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது' என்றார்.
இதையும் படிங்க: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் இருவர் காஷ்மீரில் கைது