ETV Bharat / bharat

17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா - விஜய் தேவரகொண்டாவின் படங்கள்

தேசிய ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் தேவரகொண்டா தனது அறக்கட்டளை மூலம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா
author img

By

Published : Jun 5, 2020, 3:55 PM IST

உலகம் முழுவதும் 'கரோனா' தொற்று காரணமாக, இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எதிர்பாராத இந்த சூழ்நிலை பல பேரின் வாழ்வாதாரத்தை பாதித்தது. வேலையை இழந்து ஸ்தம்பித்துப் போயிருந்த நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது தேவரகொண்டா அறக்கட்டளை வாயிலாக நடுத்தர குடும்பத்தினருக்கு உதவும் முயற்சியை மேற்கொண்டது.

இந்த அறக்கட்டளை இது வரை 1.7 கோடி ரூபாயில், சுமார் 17 ஆயிரத்து 723 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மளிகைப் பொருள்களை நிவாரண உதவியாக அளித்துள்ளது. மேலும் 8 ஆயிரத்து 505 தன்னார்வ தொண்டர்கள் தங்களை இதில் இணைத்துக் கொண்டு, 1.5 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டியதன் மூலம் சுமார் 58 ஆயிரத்து 808 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, ஆந்திரா, தெலுங்கானாவில் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், கடந்த ஜூன் 2 ஆம் தேதியுடன் இயக்கத்தை நிறுத்த முடிவெடுத்துள்ளது. எனவே அறக்கட்டளை எப்படி நிதி கையாளப்பட்டது என்பதை வெளிப்படையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த அறக்கட்டளை இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அறிமுகம் செய்த "முதல் வேலைத் திட்டமும்" (First Job Program) இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. நன்கொடைகளை கையாளும் விதத்தை மிக கவனத்துடன் வடிவமைத்தது இந்த அறக்கட்டளை.

அறக்கட்டளையிடம் உதவி கோரிய ஒவ்வொரு குடும்பத்தினரின் பின்னணி மற்றும் விவரங்களை சரி பார்த்து உறுதி செய்த பின்னரே, உதவி செய்யப்பட்டது. சுமார் 535 தன்னார்வலர்கள் அவர்களுடன் இணைத்து பெரும் பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வெற்றிகரமாக உதவ துணை புரிந்துள்ளது.

இதனால் பல குடும்பங்களை நெருக்கடியிலிருந்து மீட்க உதவியுள்ளது. இந்த நற்பணியைத் தொடர விரும்பும் விஜய் தேவரகொண்டா, மேலும் பல நலத்திட்டங்களை வரும் நாட்களில் அறிவிப்பார். அடிப்படையில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விஜய் தேவரகொண்டாவுக்கு, நடுத்தர குடும்பங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் கஷ்டங்களும், போராட்டங்களையும் நன்கறிந்தவர் என்பதால், இந்த நெருக்கடி காலக்கட்டத்தில் அவர்களுக்குத் தோள்கொடுக்க எடுத்த இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.