ETV Bharat / bharat

பயணிகளுக்காக கிட்டார் வாசித்துப் பாடும் காவல் அலுவலர் - வைரலாகும் வீடியோ - கிட்டார் வாசித்துப் பாடும் காவல் அலுவலர்

ஊரடங்கு தளர்வு காரணமாக நீண்ட நாள்களுக்கு பிறகு ஜம்மு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் முதல் ரயில் பயணிகளுக்காக காவல் அலுவலர் ஒருவர் கிட்டார் வாசித்துப் பாடல் பாடும் கணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

police-officer-playing-guitar
police-officer-playing-guitar
author img

By

Published : May 15, 2020, 7:01 PM IST

இது குறித்த அந்த காணொலி பதிவில், ஊரடங்கு தளர்வு காரணமாக நீண்ட நாள்களுக்கு பிறகு ஜம்மு ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதனால் அதில் பயணிக்கும் பயணிகளுக்காக கிழக்கு ஜம்முவின் துணைக் கோட்ட காவல் அலுவலர் ஒருவர் பாடல் பாடுகிறார் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

அதில் அவர் கிட்டார் வாசித்துக் கொண்டே 1970ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படத்திலிருந்து குலாபி ஆன்கேன் பாடலுடன் தொடங்கி, 1988 கயாமத் சே கயாமத் தக் திரைப்படத்திலிருந்து பாப்பா கெஹ்தே ஹைன் பாடலையும் பாடுகிறார். அந்த கணொலியை காவல்துறை அலுவலர் முகேஷ் சிங் என்பவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குரோம் உலாவியில் கூகுள் கொண்டுவரவிருக்கும் புதிய அம்சம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.