கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்தை கடந்த மார்ச் மாத இறுதியில் இந்தியா முடக்கியது. எனவே வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் ’வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்படுகின்றனர்.
கடந்த மே 7ஆம் தேதிமுதல் இந்தத் திட்டம் மூலம் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், தற்போது ஏழாவது கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இது தொடர்பாக முக்கியத் தகவலை விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “ஏழாவது கட்ட வந்தே பாரத் திட்டத்தில் சுமார் 38 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் மட்டும் ஆறாயிரத்து 188 இந்தியர்கள் ஷார்ஜா, லண்டன், நைரோபி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளனர்.
ஏர் இந்தியா, இண்டிகோ, கோ ஏர், ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் இந்தச் சேவையை மேற்கொண்டுள்ளன. தற்போதுள்ள எட்டாம் கட்ட வந்தே பாரத் திட்டம் வரும் டிசம்பர் 31ஆம் தேதிவரை தொடரும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விரைவில் அஞ்சல் வழி வாக்குரிமை!