முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி காலமானார். அவரின் அஸ்தி, இந்தியா முழுவதிலும் உள்ள புனித தளங்களில் கரைக்கப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் வாஜ்பாயின் திருவுருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
வாஜ்பாய் சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் விளங்கியதால், அவரின் திருவுருவப்படத் திறப்பு விழாவில், கட்சி பேதங்களைக் கடந்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.