ETV Bharat / bharat

திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு 2 நாள்கள் மட்டும்தான் - தேவஸ்தானம் அறிவிப்பு!

author img

By

Published : Jan 6, 2020, 2:03 PM IST

திருமலா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு இரண்டு நாள்கள்தான் திறந்திருக்கும் என தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

'Vaikuntha dwara' darshanam only for two days, says TTD Board chairman

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். மகாவிஷ்ணுவின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் சொர்க்கவாசல் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி நாளில் திறக்கப்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

ஏகாதேசி நாளான இன்று திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் ஜனவரி 6, 7 ஆகிய தேதிகளில் மட்டுமே திறக்கப்படும் என்றும், இனி பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க...ஜே.என்.யூ. தாக்குதல்: பின்புலம் என்ன?

Intro:Body:

https://www.aninews.in/news/national/general-news/vaikuntha-dwara-darshanam-only-for-two-days-says-ttd-board-chairman20200106063134/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.