ETV Bharat / bharat

பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு ரத்து: உத்தரகாண்ட் அரசு உத்தரவு

author img

By

Published : Mar 19, 2020, 4:35 PM IST

Updated : Mar 19, 2020, 6:40 PM IST

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு வேலைகளில் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.

Trivendra Rawat
Trivendra Rawat

2012ஆம் ஆண்டு உத்தரகாண்ட் காங்கிரஸ் அரசு மாநில அரசு பணிகளில் பட்டியலினத்தவர் பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் காலிப்பணியிடங்களை நிரப்பியது. அதேபோன்று 2017ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசும் காங்கிரஸ் அரசின் உத்தரவையே நடைமுறைப்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்து குறிப்பிட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில், இதனை எதிர்த்து உத்தரகாண்ட் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கேட்பதற்கு எந்தவொரு தனிப்பட்ட நபருக்கும் அடிப்படை உரிமை இல்லை.

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதா? வேண்டாமா என்பதை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என தீர்ப்பளித்தனர். இந்த விவகாரம் மக்களவையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி உத்தரகாண்ட் மாநிலத்தில் ஓபிசி பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் அரசு அலுவலக பணிகள் கடுமையாக பாதித்தன. இதனால், வேலைநிறுத்தம் செய்த ஊழியர்களை மாநில தலைமைச் செயலாளர் ராதிகா ஜா செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். கூட்டத்தின் போது, ​​பதவி உயர்வு மீதான தடை நீக்கப்படும் என தலைமைச் செயலாளர் ஒப்புக்கொண்டார். பதவி உயர்வுக்கான தடையை நீக்குவதற்கான உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 2019 செப்டம்பர் 11ஆம் தேதி வெளியான பதவி உயர்வு தடையை அரசு ரத்து செய்துள்ளது. இது தவிர, 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி மாநில அரசு உத்தரவின் படி பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், இதுகுறித்து விரைவில் விவாதிக்கப்படும் என்றும் உத்தரகாண்ட் அரசு குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனாவால் முடங்கிய மகாராஷ்டிரா

Last Updated : Mar 19, 2020, 6:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.