ETV Bharat / bharat

சிபிஎஸ்இ +2வில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவன்! - 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு மதிப்பெண்

லக்னோ: 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் துஷார் சிங் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ளார்.

சிபிஎஸ்இ +2வில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்ற உபி மாணவன்!

author img

By

Published : Jul 14, 2020, 10:54 PM IST

12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மதிப்பெண் முடிவுகள் திங்களன்று (ஜூலை13) வெளியாகின. இதில் மெரிட் பட்டியல் வெளியிடப்படாமல், வெறும் மதிப்பெண் பட்டியல் மட்டும் வெளியானது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாரில் வசிக்கும் துஷார் சிங் என்ற மாணவர் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இது குறித்து துஷார் சிங் கூறுகையில், நான் 500க்கு 500 பெற்றுள்ளதை முதலில் நான் நம்பவில்லை. அதனால் கணினியை திரும்ப திரும்ப பார்த்தேன். பின்னர் பள்ளியிலிருந்து அழைத்து வாழ்த்து தெரிவித்தார்கள். அப்போதுதான் நம்பினேன்” என்றார்.

சிபிஎஸ்இ +2வில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்ற உபி மாணவன்!
சிபிஎஸ்இ +2வில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவன்!

துஷாருக்கு சமூக ஆய்வுகளின் மீது விருப்பம் இருந்ததால், இந்தப் பாடத்தை எடுத்து படித்துள்ளார். 10ஆம் வகுப்பிலும் 97 விழுக்காடு மதிப்பெண் பெற்ற அவர், சிவில் சர்வீஸ் படிக்கவுள்ளார்.

துஷார் தந்தை ஓம் பிரகாஷ் சிங் புலந்த்ஷாரில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பேராசிரியராகவும், தாயார் கிரண் பாரதி அரசு கல்லூரியில் விரிவுரையாளராகவும் உள்ளார். இருவரும் பொருளாதாரம் கற்பிக்கின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...சமூக விரோதிகள் சிறார்களை பயன்படுத்தி குற்றங்களை செய்வதைத் தடுக்க வேண்டும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.