கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த மார்ச் 17ஆம் தேதி காலமானர். இதையடுத்து, அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பனாஜி தொகுதி காலியானது.
இந்நிலையில், இந்தத் தொகுதிக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதி இடைத்தேர்தலில் மனோகர் பாரிக்கரின் மூத்த மகனான உத்பால் பாரிக்கர் (38) நிறுத்தப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், பாஜகவின் மூத்தத் தலைவர் சித்தார்த்தை அம்மாநில பாஜக முன்மொழிந்தது.
இதற்கிடையில், இடைத்தேர்தலில் பாஜக யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் தன் ஆதரவும் பரப்புரையும் அவருக்கு உண்டு என உத்பால் பாரிக்கர் திட்டவட்டமாக தெரிவித்தார். தனது தந்தை மனோகர் பாரிக்கர் கடந்த 25 ஆண்டுகளாக நின்ற பனாஜி தொகுதியில் சித்தார்த்துக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபடப்போவதாகவும் அவர் உறுதியளித்தார்.
பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் அம்மாநில முன்னாள் அமைச்சர் அட்டனசியோ நிற்கிறார்.