ETV Bharat / bharat

அமெரிக்க-தலிபான் சமாதான ஒப்பந்தமும்... இந்தியாவில் அதன் தாக்கமும்...! - US-Taliban peace deal; And its implications in India

பிப்ரவரி 29ஆம் தேதியன்று கத்தார் தோஹாவில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிரந்தர தன்மைக்கு நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முயற்சியாக அமெரிக்காவும் ஆப்கானிஸ்தான் தலிபானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கையின் தாக்கங்கள் குறிப்பாக இந்தியாவில், எப்படி இருக்கும்  என்பது இப்போது விவாதத்திற்குரியதாகவும், தெளிவற்றதாகவும் உள்ளது.

US Taliban Peace
US Taliban Peace
author img

By

Published : Mar 5, 2020, 5:28 PM IST

இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை பேரழிவிற்கு உட்படுத்திய வன்முறை, பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் போரினால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டிலிருந்து அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டு துருப்புக்களை விலக்கிக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட விதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேர்தல் பரப்புரைக்கு ஏற்றார் போல் சமநிலை இன்றி, தற்போதைய அமெரிக்க நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

தலிபான் என்ற முறையாக அங்கீகரிக்கப்படாத ஒரு அமைப்புடன் அமெரிக்கா செய்துள்ள உடன்படிக்கை இந்த ஒப்பந்தத்தின் பலவீனத்தை காட்டுகிறது. “அமெரிக்காவிற்கும் இஸ்லாமிய ஆப்கான் அமீரகத்திற்கும், தலிபான்களுக்கும் இடையே ஒப்பந்தம் செய்து ஆப்கானில் அமைதியை கொண்டு வருவதற்கான உடன்படிக்கை” என்றும் அந்த ஒப்பந்தம் கூறுகிறது.

சமாதான உடன்படிக்கையின் முக்கிய அம்சம், தலிபான்கள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக செயல்படமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக அமெரிக்கா, அமலாக்க வழிமுறைகள் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து வெளிநாட்டு படைகளையும் திரும்பப் பெறுவதற்கான கால அளவை அறிவிக்கும் என்ற உத்தரவாதங்களை அளித்துள்ளது.

ஒரு சிக்கலான, நீண்டகாலமாக நடந்த பேச்சுவார்த்தையில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்கானிய அரசாங்கத்தை அங்கீகரிக்காத, எதற்கும் கட்டுப்படாத தலிபான் தலைமையை அமெரிக்கா சமாளிக்க வேண்டியிருந்தது. இந்த ஒப்பந்தத்தை டாக்டர் அப்துல்லா குறிப்பிட்டிருந்தாலும் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஷ்ரப் கானி தலைமையிலான ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலந்தாலோசிக்கவில்லை.

செப்டம்பர் 11, 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு இந்தியா தலிபான்களுடன் ஈடுபட தயங்கியதையும், அதற்குப் பதிலாக ஆப்கானிஸ்தானில் ஜனநாயக வழிமுறையை வலுப்படுத்துவதை ஆதரித்ததையும் இங்கு நினைவு கூறலாம்.

முன்னதாக தலிபான்கள் டிசம்பர் 1999இல் ஒரு இந்திய சிவில் விமானத்தை கடத்திச் செல்லவும், சில பயங்கரவாதிகளை விடுவிக்கவும் முடிந்தது, மேலும் தலிபான்களின் இந்தத் துரோக செயல் இந்தியாவின் எதிர்ப்பை சம்பாதித்தது. மேலும், 1990களின் மத்தியில் தலிபான்கள் முக்கியத்துவம் பெற்றதிலிருந்து பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள இராணுவத்தின் தலைமையகம் இந்த குழுவுக்கு அளித்த ஆதரவு இந்தியாவின் ஆப்கானிய கொள்கையில் ஒரு சிக்கலான பாகிஸ்தானின் பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இது அந்தப் பகுதியில் அமெரிக்காவின் சூழ்ச்சி காரணமாக அதிகரித்து பனிப்போராக மாறியது. அந்தக் காலகட்டத்தில் அமெரிக்க-சோவியத் இடையிலான போட்டி காரணமாக சோவியத் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. இதன் விளைவாக 1980களில் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் பதவியிலிருந்தபோது ஆப்கானிஸ்தான் முஜாஹிதின் எழுச்சி ஏற்பட்டது.

1980 முதல் ஆப்கானிஸ்தான் மக்கள் போராளிகளுக்குள் ஏற்பட்ட பல்வேறு சண்டைகளில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளனர். அமெரிக்க-சோவியத் பனிப்போர் முடிவு; ஈரான்-சவுதியில் மத பிளவு; ஜிகாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு மற்றும் இப்போது பி.ஆர்.ஐ (பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி)இல் சீன முதலீடு ஆகியவை தெற்காசியாவை அதிக புவி-அரசியல் மையமாகக் மாற்றியுள்ளது.

இந்தக் காரணங்களால் இந்தியா இந்த பிரச்சினையில் தன் கவனத்தை செலுத்துகிறது. பிப்ரவரி 29 சமாதான உடன்படிக்கைக்குப் பதிலளித்த இந்தியா "வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து; சர்வதேச பயங்கரவாதத்துடனான உறவுகளை துண்டித்து, நீடித்த அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும்.

ஆப்கான் தலைமையிலான, ஆப்கானுக்கு சொந்தமான கட்டுப்பாட்டு செயல்முறை மூலம் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் ஆதரிப்பதே இந்தியாவின் நிலையான கொள்கை " என்று ஜாக்கிரதையாக குறிப்பிட்டுள்ளது.

"அண்டை நாடான, ஆப்கானிஸ்தான் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளின் நலனும் பாதுகாக்கப்படும் அமைதியான, ஜனநாயக மற்றும் வளமான எதிர்காலத்திற்கான அவர்களின் தேவைகளை உணர்ந்து ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இந்தியா அனைத்து உதவிகளையும் அளிக்கும்." என்று மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு முக்கியத்துவம் அளித்து டெல்லி வலியுறுத்துவது பொருத்தமானது. அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை, காபூல் அரசுடன் அல்லாமல் 18 ஆண்டுகளாக விலைமதிப்பற்ற உயிர்களையும், செல்வத்தையும் இழக்க காரணமாயிருந்த போரை நடத்திய பயங்கரவாத குழுவுடன் தான் செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தலிபான்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு அமெரிக்கா புறக்கணித்துள்ளது.

தலிபான் படை அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் தாக்காது, இது இந்தியாவுக்கு பொருந்தாது என்பது வினோதமான கொள்கை . எனவே இந்திய நலன்களுக்கு விரோதமான அந்த கூறுகள் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.

இதில் பாரம்பரியமான பாகிஸ்தான்-தலிபான் தொடர்பும் கவலைக்குரியது. பிப்ரவரி 29 உடன்படிக்கையின் பலவீனம் ஆவணத்தில் கையெழுத்திட்ட முதல் நாளிலேயே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கானி ஏற்கனவே இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட கைதிகளின் இடமாற்றத்தை வாஷிங்டன் விரும்பியபடி செய்ய முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் புத்துயிர் பெற்றால், அது ஐ.எஸ்.ஐ.எஸ் (இஸ்லாமிய அரசு) போன்ற குழுக்களுக்கும், அல்கொய்தாவின் மீதமுள்ளவர்கள் கருவியாக இருப்பதற்கும் இடமளிக்கும். அது இந்தியாவுக்கு மிகவும் நெருக்கடியை கொடுக்கும்.

இந்த சூழலில், பிப்ரவரி இறுதியில் டெல்லியில் நடந்த வன்முறை, அதன் அரசியல் மற்றும் வகுப்புவாத துணையுடன் 45 பேர் கொல்லப்பட்டதோடு, முஸ்லிம் மக்களை குறிவைத்ததையும் இஸ்லாமிய அரசு குறிப்பிட்டுள்ளது. வடகிழக்கு டெல்லியில் ஒரு முஸ்லீம் ஒரு கும்பலால் பயங்கரமாக தாக்கப்பட்டதன் கொடூரமான படம் இஸ்லாமிய அரசின் சைபர் பிரிவால் பயன்படுத்தப்பட்டது.

இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவை பழிவாங்க வேண்டும் என்றும் கூறுகிறது. இன்று வரை இஸ்லாமிய அரசு இந்தியாவிலிருந்து ஆட்களை சேர்ப்பதில் ஓரளவு வெற்றியைப் பெற்றுள்ளது. அதனால் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு அதிக விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

அமெரிக்க-தலிபான் சமாதான உடன்படிக்கை அதன் நோக்கங்களில் உறுதியில்லாததாகவும் வரம்புக்கு உட்பட்டதாகவும் உள்ளது. ஆனால் நீண்ட கால தாக்கம் எதிர்பார்ப்பது போல நேர்மறையானதாகவும் அமைதிக்கு உகந்ததாகவும் இருக்காது. ஆப்கானிஸ்தான் குகையில் ஒளி, மங்கலாகவே உள்ளது.

இதையும் படிங்க: பிறந்த தேதிக்கு பதிலாக நாய் புகைப்படத்தை அச்சிட்ட தேர்தல் ஆணையம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.