அமெரிக்க விமான படைக்குச் சொந்தமான நான்காவது கார்கோ விமானம் குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரில் தரையிறங்கியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலனியா, மகள் இவாங்கா ஆகியோருடன் தனது முதல் இந்திய பயணமாக நாளை மறுநாள் (24ஆம் தேதி) வருகிறார்.
அன்றைய தினம் அகமதாபாத்தில் நடக்கும் பேரணியிலும் கலந்துகொள்கிறார். இந்தப் பேரணியில் சுமார் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவில் 36 மணி நேரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பாதுகாப்புப் பணியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அமெரிக்க அதிபரின் இந்தப் பயணத்தின்போது ஐந்து முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு விண்ணப்பிக்கத் தயாரா?